|
![](../../005.PNG) |
|
விஜயன்.கே:
பெயர்: கே. விஜயன்
முகவரி: 23/49, மயூரா
பிளேஸ், ஹவ்லொக் வீதி, கொழும்பு – 06
தொலைபேசி: 94714031926 |
|
படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை, நூல் விமர்சனம்
படைப்புகள்:
நாவல்கள்:
- விடிவுகால நட்சத்திரங்கள் -
வீரகேசரிப் பிரசுரம்
- மனநதியின் சிறு அலைகள் -
(2000 இல் வெளியானது)
- அன்னையின் நிழல் (2004)
விருதுகள்:
மனித நிழல்கள் - வீரகேசரி நடத்திய
பிரதேச நாவல் போட்டியில் கொழும்புப் பிரதேசத்துக்கான முதல்பரிசு
பெற்றது.
இவர் பற்றி:
- கே. விஜயன் சிறந்த ஒரு படைப்பாளி.
70 வரையிலான சிறுகதைகள்,
13 தொடர்கதைகள் பத்திரிகைகளில்
வெளிவந்தன. இவர் பத்திரிகைகளிலேயே பெரும்பாலும் எழுதிவந்தார்.
மனித நிழல்கள், மனநதியின் சிறு அலைகள் என்ற இரு நாவல்களதும் மூலப்
பிரதிகளும் தொலைந்து விட்டன. மனநதியின் சிறு அலைகள் அவர் எழுதிய
முதல் நாவல். கிட்டத்தட்ட 25
வருடங்களுக்கு முன் எழுதிய இந்நாவலின் மூலப்பிரதியும்
தொலைந்துவிட்ட நிலையில் அதன் குறிப்புக்களைக் கொண்டு மறுபடியும்
நாவலலை எழுதினார். அது பூபாலசிங்கம் புத்தக நிலையத்தார் அச்சேற்றிப்
பிரசுரித்தனர். வீரகேசரியிலும், ஈழநாட்டிலும் கலை, இலக்கிய, அரசியல்
பத்திகளை எழுதி வருகிறார். ஆந்தையார் பார்வையில், கலா மின்மினிகள்
ஆகிய பத்திகள் பிரசித்தி பெற்றவை.
|
|
![](../../005b.PNG) |
|
|